உலகம் செய்தி

வாய்ப்பை வீணடிக்கக் கூடாது – லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தல்

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானவை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன்,தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தமே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முக்கிய நுழைவாயில் என அவர் கூறியுள்ளார்.

மேலும், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவது, தெற்கு பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை உறுதி செய்வது, கைதிகளை விடுவிப்பது மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை லெபனானின் முக்கிய இலக்குகள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் பல சிரமங்களை எதிர்கொண்ட லெபனான் மக்கள் தற்போது புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும், இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும் என்பதால் இதனை தவறவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!