சஜித்தின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதிருப்தி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின்போது ஓரிரு எதிரணி எம்.பிக்களையேனும் தம்முடன் அழைத்து செல்லாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைமீது அவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உத்தியோகப்பூர்வ – முக்கியத்துவமிக்க வெளிநாட்டு பயணங்களின்போது எதிரணி சார்பில் வெளிவிவகாரம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக அமைந்துள்ளது.
எனினும், சில அதிகாரிகளை மட்டுமே சஜித் அழைத்து சென்றுள்ளார் .
இந்திய விஜயத்தின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





