எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆட்டு தலை மம்மிகள்: அதிர்ச்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000 ஆட்டு தலை மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்த் நாட்டில் இறந்தவர்களை பதப்படுத்தும் முறை இறுதி சடங்கு நிகழ்வின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.தொடர்ந்து எகிப்து நாட்டில் பல ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் மம்மிகளை கண்டு பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000 ஆட்டு தலை மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர்.
கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு புகழ்பெற்ற அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு பிரபலமான நாய்கள், ஆடுகள், மாடுகள், மான்கள் மற்றும் கீரிப் பிள்ளை ஆகியவற்றின் மம்மிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின் தலைவரான சமே இஸ்கந்தர், ”செம்மறியாட்டின் தலை உண்மையில் ராம்செஸ் II-க்கு வழங்கப்பட்ட காணிக்கையாக இருக்கலாம்” என்கிறார்.கிமு 1304 முதல் 1237 வரை ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக ராம்செஸ் II எகிப்தை மன்னராக ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2374 மற்றும் 2140BC மற்றும் டோலமிக் காலம், கிமு 323 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் ராம்செஸ் II கோவில் மற்றும் அங்கு நடந்த பிற நடவடிக்கைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து மீட்டர் தடிமன் கொண்ட (16 அடி) சுவர்களைக் கொண்ட ஒரு அரண்மனையின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர். அவை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டவை ஆகும். அதே இடத்தில், வேறு சில சிலைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.சுமார் 105 மில்லியன் மக்கள் வசிக்கும் எகிப்து நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, அந்நாட்டின் வருமானம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. அதில் இரண்டு மில்லியன் மக்கள் வேலை செய்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் 13 மில்லியனாக இருந்ததை ஒப்பிடுகையில், 2028-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 30 மில்லியன் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு சுற்றுலாவை புதுப்பிக்க அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது.