பொழுதுபோக்கு

ராமாயணம் படத்தில் விஜய்சேதுபதி? எஸ்கேப் ஆன ஹீரோ.. இது கூட நல்லாத்தான் இருக்கு…

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவானது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் பெரிதளவில் ஓடாத நிலையில், மீண்டும் ஒரு ராமாயண படத்தை பாலிவுட்டில் இயக்க உள்ளனர்.

சமீபத்தில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், ராமர், ஹனுமான் படங்களுக்கு அதிகளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் சொதப்பி விட்டது. இந்நிலையி, ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயணம் படத்தை உருவாக்க தங்கல் படத்தை இயக்கிய நித்தேஷ் திவாரி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாராம்.

ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக யஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது யஷ் விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வட இந்திய நடிகரை ராமராகவும் தென்னிந்திய நடிகரை ராவணனாகவும் போட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வந்த நிதேஷ் திவாரிக்கு யஷ் தற்போது அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என விலகி விட்டதாக கூறியது ஷாக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

See also  மீண்டும் பூதாகரமாக வெடித்தது சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து!! பொங்கிய ஜோடிகள்

டாக்ஸிக் படத்தில் நடித்து வரும் யஷ் அடுத்து கேஜிஎஃப் 3 படத்தில் தான் கவனம் செலுத்தப் போகிறார் என்கின்றனர்.

ஷாருக்கானின் ஜவான், கத்ரீனா கைஃப் உடன் மெரி கிறிஸ்துமஸ் படங்கள் மூலம் பாலிவுட்டில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள விஜய்சேதுபதி தற்போது ராமாயணம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ராவணனாக விஜய்சேதுபதி நடிப்பாரா? அல்லது வேறு கதாபாத்திரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கதர் 2 படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சன்னி தியோலும் தற்போது ராமாயணம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content