உலகம்

காசாவை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் நிதியுதவி – அமைதிவாரிய கூட்டத்தில் அறிவிப்பு!

காசாவை மீளக் கட்டியெழுப்ப ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதிவாரியத்தின் தொடக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போது காசாவின் மறுகட்டமைப்புக்கான குறிப்பிடத்தக்க உறுதிமொழிகளை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கஜகஸ்தான், அஜர்பைஜான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் காசா மறுகட்டமைப்பு நிதியத்திற்கு 7 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

கூடுதல் பங்களிப்புகளில் கால்பந்து தொடர்பான திட்டங்களுக்கு FIFAவிடமிருந்து 75 மில்லியன் டொலர்களும் மனிதாபிமான உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து 2 பில்லியன் டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்ட மொத்தத் தொகை காசாவை மீண்டும் கட்டியெழுப்பத் தேவை என மதிப்பிடப்பட்டுள்ள 70 பில்லியன் டொலர்களை விட குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசா பல வருட மோதல்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ள நிலையில் விரிவான மறுக்கட்டமைப்பு முயற்சிகள் தேவைப்படுகின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!