இலங்கை செய்தி

அடுத்த மாதம் ரஷ்யா பறக்கிறார் விஜித ஹேரத்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர் மாஸ்கோ Moscow செல்கின்றார்.

ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ மற்றும் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விஜித ஹேரத்தின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!