அமெரிக்காவின் தேடுதல் ஹெலிகாப்டர்களும் இலக்கு – ஈரானின் அதிரடி தாக்குதல்!
பாரசீக வளைகுடாப் பகுதியில் நேற்றைய தினம் அமெரிக்காவின் போர் விமானத்தை ஈரான் தாக்கி அழித்திருந்த நிலையில், தேடுதல் ஹெலிகாப்டர்களை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் விமானத்தை தேடும் பணியில் இருந்த ஹெலிகாப்டர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த பணியாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை A-10 தாக்குதல் விமானம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதில், அதன் விமானி சேதமடைந்த விமானத்தை குவைத் வான்வெளிக்குள் செலுத்தி, பின்னர் அதிலிருந்து வெளியேறி மீட்கப்பட்டதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




