உலகம் முக்கிய செய்திகள்

(BREAKING) வெனிசுலா மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா – ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் வான்வெளியில் வெடிப்புகள், உரத்த சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), வெனிசுலா தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் X ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இப்போது அவர்கள் கராகஸ் (Caracas) மீது குண்டு வீசுகிறார்கள் … ஏவுகணைகளால் குண்டு வீசுகிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

CBS செய்திகள் ட்ரம்ப் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக செய்தி வெளியிட்ட சில மணிநேரங்களில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.

 

தாக்குதல் தொடர்பான காணொளி 

https://media.cnn.com/api/v1/loops/stellar/prod/explosion-cook-off-cut.mp4?c=original

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!