வேற்று கிரகவாசிகள் பற்றிய கோப்புக்களை வெளியிட ட்ரம்ப் உத்தரவு!
வேற்று கிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) தொடர்பான அரசாங்க கோப்புகளை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் அதனை உண்மை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒபாமாவின் கூற்று தவறானது எனக் கூறிய ட்ரம்ப் தற்போது அனைத்து கோப்புக்களையும் வெளியிட பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) போன்ற அதிகாரிகள் நேர்மறையாக பதிலளித்தனர்.
அதே நேரத்தில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி தாமஸ் மாஸி (Thomas Massie) உட்பட சிலர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகளை வெளியிடுவதில் இருந்து இது திசைதிருப்பலாக இருக்கலாம் என்று விமர்சித்துள்ளனர்.




