உலகம்

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க பிரான்ஸ் ஜனாதிபதிக்கு டிரம்ப் ஆலோசனை

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு டொனால்ட் டிரம்ப் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்ரோன் மனைவியிடம் அடிவாங்கும் விடியோ வெளியானது குறித்து கருத்த வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார். .

விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, பிரான்ஸ் ஜனாதிபதி அவரது மனைவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு, மக்ரோனை, அவரது மனைவி அடித்ததாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராதவிதமாக, விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது நடந்த இந்த சண்டையின் ஒரு பகுதி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு, அது எப்போதும் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

அதாவது, வியத்நாமுக்கு தனது மனைவியுடன் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் முகத்தில் அவரது மனைவி ப்ரிகிட் அடித்து காயப்படுத்துவது போன்ற காட்சிகள் மேற்கண்ட விடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில்தான், இந்த விடியோ காட்சிகள் குறித்து வெள்ளிக்கிழமை தனது ஓவல் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தான் மக்ரோனுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது நலத்தை விசாரித்ததாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் செய்தியாளர்களுக்கு உறுதி அளித்தார்.

அவர்கள் இருவருமே மிகச் சிறந்தவர்கள், எனக்கு அவர்களை மிக நன்றாகவே தெரியும். ஆனால், அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த உரையாடலை நகைச்சுவையாக முடிக்க நினைத்த டொனால்ட் டிரம்ப், ஒரு உலகத் தலைவர், மற்ற உலகத் தலைவருக்கு அளிக்கும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளவும், எப்போதும் கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறியதைக் கேட்டு அவரும், அங்கிருந்தவர்களும் பலமாக சிரித்தனர்.

முன்னதாக, மனைவியிடம் அடிவாங்கியதாக வெளியான விடியோ குறித்து மேக்ரானே விளக்கமும் கொடுத்துள்ளார். அதில், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டலும் கேலியும் செய்துகொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்