ஐரோப்பா

இறந்து போன முதியவரின் உடலை ஃபிரீசரில் வைத்த பிரித்தானியர்!

பிரிட்டன் சேர்ந்த நபர் ஒருவர்,  இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார்.

இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால்  இவரது உடல் ஆகஸ்ட் 22,  2020 அன்று தான் கிடைத்தது.

ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு டேமியன் ஜான்சன் உயிரிழந்த ஜான் வெயின்ரைட்-இன் வங்கி கணக்குகளை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஷாப்பிங் செய்வது,  ரொக்கத்தை எடுத்து செலவிடுவது என்று ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

வெயின்ரைட்-இன் வங்கி கார்டு கொண்டு பணம் எடுத்துக் கொள்வது  பொருட்களை வாங்குவது மற்றும் தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்களில் செப்டம்பர் 23,  2018 முதல் மே 7,  2020 வரை டேமியன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்