இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

  • February 27, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் (Rinku Singh) தந்தை Khachandra Singh இன்று(27) காலமானார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ICC 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருந்த Rinku Singh, தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக இந்த வார தொடக்கத்தில் அணியிலிருந்து வெளியேறிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

இந்தியா – ஸிம்பாப்வே மோதலில் இசை விருந்து!

  • February 25, 2026
  • 0 Comments

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (26) நடைபெறவுள்ள இந்திய மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, அனிருத்தின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. தனது துள்ளலான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடும் அனிருத், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தவுள்ளார். குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் குறித்த நிகழ்வு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

error: Content is protected !!