உலகம் செய்தி

தனது வாரிசுக்கு போர் பயிற்சி வழங்கும் வடகொரிய ஜனாதிபதி!

  • March 20, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளுடன் இணைந்து ஒரு புதிய வகை ராணுவ டாங்கியை இயக்கும் போர் பயிற்சியைப் பார்வையிட்டார். சுமார் பதிமூன்று வயதுடைய அவரது மகள் ஜூ ஏ, அந்தப் போர் வாகனத்தை நேரடியாக ஓட்டிப் பழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ராணுவ நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பது, கிம் ஜாங் உன்னிற்குப் பிறகு அவரே அடுத்த தலைவராக உருவெடுப்பார் என்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நவீன கால […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் ஆகாய அசுரனை தாக்கியதா ஈரான்?

  • March 20, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஈரான் தரப்பில் அறிவிப்பு வெளியானாலும், அமெரிக்க ராணுவம் இதன் காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது பல ட்ரோன்களையும், எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் இழந்துள்ளன. இந்நிலையில் மேற்படி தாக்குதலானது அமெரிக்காவுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது. உலகில் […]

இலங்கை செய்தி

ஜப்பான் கடற்படைத் தளபதிக்கு இலங்கை அழைப்பு!

  • March 20, 2026
  • 0 Comments

ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு, ஜப்பானில் முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான இலங்கை தூதுக்குழு டோக்கியோவின் இச்சிகாயா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்துக்குள் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்துக்கு (NIDS) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டது. பாதுகாப்பு, மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்நிறுவனம், அதன் நிபுணர் குழுவின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் […]

உலகம் செய்தி

‘மத்திய கிழக்கு போர்’ – மசூதிக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடும் எதிர்ப்பு!

  • March 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸும்  Anthony Albanese , அமைச்சர் டோனி பர்க்கும் Tony Burke சிட்னியிலுள்ள லக்கம்பா மசூதியில் நடைபெற்ற ஈத் பெருநாள் வழிபாட்டில் கலந்துகொண்டபோது, அங்கிருந்த ஒரு சிறிய குழுவினரால் கடுமையான எதிர்ப்புகளையும் கூச்சல்களையும் எதிர்கொண்டனர். காசா மற்றும் லெபனான் விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஒரு சிலர் கோஷங்களை எழுப்பினர். அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர். மசூதியில் கோஷங்களை எழுப்பிய தரப்பினரை அங்கிருந்தவர்கள் கட்டுப்படுத்தினர். இவ்வாறு எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும் […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து இன்று மோதல்!

  • March 20, 2026
  • 0 Comments

தென்னாபிரிக்கா South Africa மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது. நியூசிலாந்து Aucklandஇல் போட்டி ஆரம்பமாகும். நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது. 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால் இந்தத் தொடர் 1-1 […]

இந்தியா உலகம்

‘போர் நிறுத்த முயற்சி’ – பிரதமர் மோடி களத்தில்!

  • March 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது. இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியுள்ளார். முதலில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. “ மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் கலந்து பேசினேன். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும். போரை நிறுத்த அமைதிப் பேச்சு , இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’ – ஜனாதிபதி அநுர நாடாளுமன்றில் இன்று உரை!

  • March 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake, நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றவுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சுழலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் தொடர்பில் தமதுரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார். இதுவரையிலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் சபையில் ஜனாதிபதி விவரிக்கவுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்ட உதவி!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப் போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது மாணவர்களுக்கான […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணிநேர விசாரணை!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு: பின்னணி என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது, வடக்கில் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என இலங்கை தமிழரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் Gnanamuthu Srinesan இவ்வாறு வினா தொடுத்தார். “யாழ்.பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். மாணவர்களின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைப்பாடுகள் […]

error: Content is protected !!