அரசியல் இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயகொடியின் ‘தலை’ குறிவைப்பு: வருகிறது பிரேரணை!

  • March 10, 2026
  • 0 Comments

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி SJP தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. அவ்வேளையில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த கெஹலியவை ஆதரிப்பது தவறு, மனசாட்சியின் பிரகாரம் மொட்டு கட்சியினர் வாக்களிக்க […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் தேசியக் கொடியை இறக்கியவர் யார்?விசாரணை வேட்டை தீவிரம்!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் இன்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் அதிரடியாகக் கீழே இறக்கினர். அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது […]

இலங்கை செய்தி

தாக்குதல் பற்றி இலங்கைக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியதா அமெரிக்கா?

  • March 10, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, “தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் நிலைப்பாட்டுக்கு சுவிஸ் பாராட்டு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது […]

இலங்கை செய்தி

பொருளாதார கண்காணிப்புக்குழுவை நியமித்தது இலங்கை!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ Anil Jayantha Fernando தலைமையில் இதற்குரிய குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்,அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

இந்தியா செய்தி

ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்தில் இந்தியா!

  • March 10, 2026
  • 0 Comments

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் Stockholm International Peace Research Institute ஆய்வு அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை குவிப்பதற்கு பிரதான காரணமென கூறப்படுகின்றது. கடந்த 2016- 2020 கால கட்டத்தை […]

இலங்கை செய்தி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திருகோணமலை பெண்ணுக்கு உயரிய விருது!

  • March 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த பாத்திமா ஸஜீஹா அமீனுக்கு Fatima Sajeeha Amin பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (Houses of Parliament) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றி வரும் மகத்தான பணிகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக LAS அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் (Mutur) பகுதியில் ஒரு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் அப்பிராந்தியத்திற்கு 2026.02.28 […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்.ஜே. பாலாஜி!

  • March 10, 2026
  • 0 Comments

‘கருப்பு’ படம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji தெரிவித்துள்ளார். மேற்படி படம் தொடர்பில் காட்டுத் தீ போல வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji  வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கருப்பு’ படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யா ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இந்த காத்திருப்பு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும். நானும் இரண்டு […]

விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

  • March 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரிசுத் தொகையை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா 6 கோடி ரூபா வீதம் கிடைக்கப்பெறும். மீதமுள்ள 41 கோடி ரூபா பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த […]

error: Content is protected !!