இலங்கை செய்தி

யாழில் சினிமா பாணியில் வன்முறை: ஒரே இரவில் 5 வீடுகள்மீது தாக்குதல்!

  • March 12, 2026
  • 0 Comments

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை […]

இலங்கை செய்தி

LAUGFS Gas விலையும் அதிகரிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

இலங்கையில் ‘லாப்’ சமையல் எரிவாயுவின் LAUGFS Gas விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே இன்று (11) லாப் கேஸின் விலையும் எகிறியுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடையுடை சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,630 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ லாப் சமையல் எரிவாயுவின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1, 862 ரூபாவாகும். சர்வதேச சந்தை விலை […]

அரசியல் இலங்கை செய்தி

எரிபொருள் விலையை குறைக்குமாறு சஜித் வலியுறுத்து!

  • March 11, 2026
  • 0 Comments

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, Sajith Premadasa அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இன்று (11) விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பொய்யுரைத்துள்ளது. உலக சந்தையில் அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சி அமைந்தது. எனவே, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த […]

விளையாட்டு

பங்களாதேஷிடம் மண்டியிட்டது பாகிஸ்தான் அணி!

  • March 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் ICC ODI பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. ICC T -20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் […]

இலங்கை செய்தி

பாலைதீவு படகு விபத்து:பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

  • March 11, 2026
  • 0 Comments

யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையிலிருந்து கடந்த 6ஆம் திகதி பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அன்றைய தினமே இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 12 பேர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID இல் முறைப்பாடு!

  • March 11, 2026
  • 0 Comments

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் FCID, வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபா நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு […]

இலங்கை செய்தி

” பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்” – ஜனாதிபதி அறைகூவல்!

  • March 11, 2026
  • 0 Comments

“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.”  என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake. தெரிவித்தார். எனவே, மேற்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் […]

இலங்கை செய்தி

” ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு ஒன்றிணைவோம்”

  • March 11, 2026
  • 0 Comments

ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (11.03.2026) காலை நடைபெற்றது. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர விசேடமாகப் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், எமது வடக்கு மாகாணத்தின் […]

இலங்கை செய்தி

வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையினருக்கு அழைப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

  “வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத் தற்போது ஒரு சாதகமான […]

உலகம்

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படத்தளம் இடிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளமொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த வருடம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. ஆதனை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 […]

error: Content is protected !!