உலகம்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் முடிவை மாற்றியதன் பின்னணி என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஐந்தாவது வீராங்கனை தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். ஈரான் அணியின் கேப்டன் சஹ்ரா கன்பாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தேசபக்தி உணர்வுடன் நாடு திரும்பியதாக ஈரான் ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. முன்னதாக, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மௌனம் காத்ததால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஏழு வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு கோரினர். தற்போது அவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில், […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அழிந்த அமெரிக்க ராடர்கள்

  • March 16, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் குறிப்பாக ராடர்கள், ஈரான் தாக்குதலில் அழிக்கப்பட்டதால், வானில் எதிரிகளின் ஏவுகணைகள் இலக்கை அடையும் முன், அவற்றை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்ட (The Terminal High Altitude Area Defense – THAAD) ஏவுகணைகளை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. ராடர்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை வெளியான பின்னர் அமெரிக்கா இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கல்ப் நியூஸ் (gulfnews) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வோசிங்டன் போஸ்ட் (The Washington Post) அறிக்கையை […]

பொழுதுபோக்கு

மே 15 இல் திரைக்கு வருகிறது ‘கருப்பு’?

  • March 16, 2026
  • 0 Comments

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதென தெரியவருகின்றது. படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்திருந்தாலும், தமிழக சட்டபேரவைத் தேர்தல் திகதி வெளியாகும்வரை படக்குழுவினர் காத்திருந்தனர். தேர்தல் காலப்பகுதியை வைத்து தமது படத்தின் வெளியீட்டு திகதி நிர்ணயிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதி தேர்தலும், மே 4-ம் ஆம் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ‘கருப்பு’ படத்தினை மே […]

இலங்கை செய்தி

எரிசக்தி அமைச்சரின் ‘தலை’ குறிவைப்பு: 18 ஆம் திகதி பிரேரணை கையளிப்பு!

  • March 16, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே எம்.பிக்களிடம் நாளை கையொப்பம் பெறப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தரமற்ற நிலக்கரி இறக்குமதி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு தலையிடி: போர்க்கப்பல் அனுப்ப சில நாடுகள் மறுப்பு!

  • March 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் Hormuz நீரிணைக்கு தமது நாடு போர்க்கப்பல்களை அனுப்பாது என்று ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் Catherine King திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் தமது எதிரி நாடுகளின் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையைப் பாதுகாப்பளிக்க போர்க்கப்பல்களை அனுப்பி உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் […]

இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!

  • March 15, 2026
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர். இதன்போது , ஈச்சலம்பற்று கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 318 பயனாளர்களுக்கும், குச்சவெளி கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 88 […]

உலகம் செய்தி

உச்ச தலைவர் உயிருடன் இருந்தால் சரணடைவதே ஒரே வழி: ட்ரம்ப் வலியுறுத்து!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “உயிருடன் இல்லை என்றே எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலவேளை அவர் உயிருடன் இருந்தால்கூட தனது நாட்டுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் சரணடைய வேண்டும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றது. விதிமுறைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை. அணு சக்தி திட்டங்களை ஈரான் முழுமையாக கைவிட […]

உலகம் செய்தி

புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன? ஈரான் விளக்கம்!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei நலமுடன் இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி Abbas Araghchi தெரிவித்தார். ஈரானின் புதிய உச்ச தலைவர் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என அமெரிக்கா மற்றும் இஸரேல் என்பன அறிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, சர்வதேச எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை, ஈரானின் எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் எனவும் கூறினார். […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!

  • March 15, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் கூடவுள்ளது. மேற்படி குழுவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டு பெண்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த மேலும் மூன்று வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் கோரியிருந்த அரசியல் புகலிட விண்ணப்பங்களை ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு வீராங்கனை தமது முடிவை மாற்றி இருந்த நிலையிலேயே தற்போது மேலும் மூவர் ஈரான் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இவர்களின் முடிவை ஈரான் அரசாங்கம் வரவேற்றுள்ளது. வீராங்கனைகளின் தேசியப்பற்று மற்றும் தேசபக்திக்கு கிடைத்த வெற்றியெனவும் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் […]

error: Content is protected !!