இலங்கை செய்தி

அரச சேவை: அமைச்சரவைக்குழு கூடி ஆராய்வு!

  • March 20, 2026
  • 0 Comments

அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையை தொடர்ச்சியாக பேணுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு அரச […]

இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: நீதி அமைச்சர் திட்டவட்டம்!

  • March 20, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) சாணக்கியன் இராசமாணிக்கம் Chanakyan Rajamanickam எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். “ 2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது. காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை. போரின் போது இரு […]

உலகம் செய்தி

ஈரானின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி!

  • March 20, 2026
  • 0 Comments

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி Ali Mohammad Naini , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவராவார். ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி எத்தகைய போர்ச் சூழலிலும் தடையின்றித் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார். குறிப்பாக வளைகுடாப் பகுதிக்குள் அமெரிக்கக் கப்பல்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!

  • March 20, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu தெரிவித்தார். “தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக […]

இலங்கை செய்தி

அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை!

  • March 20, 2026
  • 0 Comments

இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று (20) எடுத்துரைத்தார். ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிரணியால் பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார். ஜனாதிபதி தமதுரையில் கூறிய முக்கிய சில விடயங்கள் வருமாறு, நடுநிலைக் கொள்கை “மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்தக் […]

இலங்கை செய்தி

வடக்கில் அபிவிருத்திகளுக்கு தடை வேண்டாம்: ஆளுநர் பணிப்பு!

  • March 20, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் […]

பொழுதுபோக்கு

ஏப்ரல் 9 திரைக்கு வருகிறது ‘லீடர்’!

  • March 20, 2026
  • 0 Comments

லெஜண்ட் சரவணன் Legend Saravanan நடித்துள்ள ‘லீடர்’ திரைக்கு வரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி படம் வெளியிடப்படவுள்ளது. ‘லீடர்’ படத்தின் டீஸர் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9-ம் திகதி ‘லீடர்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ் உள்ளிட்ட பலர் இதில் […]

உலகம் செய்தி

தனது வாரிசுக்கு போர் பயிற்சி வழங்கும் வடகொரிய ஜனாதிபதி!

  • March 20, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளுடன் இணைந்து ஒரு புதிய வகை ராணுவ டாங்கியை இயக்கும் போர் பயிற்சியைப் பார்வையிட்டார். சுமார் பதிமூன்று வயதுடைய அவரது மகள் ஜூ ஏ, அந்தப் போர் வாகனத்தை நேரடியாக ஓட்டிப் பழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ராணுவ நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பது, கிம் ஜாங் உன்னிற்குப் பிறகு அவரே அடுத்த தலைவராக உருவெடுப்பார் என்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நவீன கால […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் ஆகாய அசுரனை தாக்கியதா ஈரான்?

  • March 20, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஈரான் தரப்பில் அறிவிப்பு வெளியானாலும், அமெரிக்க ராணுவம் இதன் காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது பல ட்ரோன்களையும், எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் இழந்துள்ளன. இந்நிலையில் மேற்படி தாக்குதலானது அமெரிக்காவுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது. உலகில் […]

இலங்கை செய்தி

ஜப்பான் கடற்படைத் தளபதிக்கு இலங்கை அழைப்பு!

  • March 20, 2026
  • 0 Comments

ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு, ஜப்பானில் முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான இலங்கை தூதுக்குழு டோக்கியோவின் இச்சிகாயா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்துக்குள் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்துக்கு (NIDS) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டது. பாதுகாப்பு, மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்நிறுவனம், அதன் நிபுணர் குழுவின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் […]

error: Content is protected !!