இந்தியா

AI மாநாட்டில் பில் கேட்ஸின் உரை ரத்து: பின்னணி என்ன?

  • February 19, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு AI தாக்க உச்சி மாநாட்டில் ஆற்றவிருந்த முக்கிய உரையை பில் கேட்ஸ் Bill Gates இரத்து செய்துள்ளார். இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், கேட்ஸ் அறக்கட்டளை Gates Foundation விசேட அறிக்கையொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளது. “ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் அமெரிக்க கடற்படை கட்டளைத் தளபதி!

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் Admiral Steve Koehler மூன்று நாட்கள் பயணமாக இன்று (19) இலங்கை வந்தார். 21 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருக்கும் அவர் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன், பேச்சுக்களை நடத்துவார் என அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மையில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பன பற்றியே அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பயணம், […]

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனின் கதிரைக்காக சபையில் அர்ச்சுனா சண்டை!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இரா. சாணக்கியன் Chanakyan நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதரன் Siridaran எம்.பிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. Arjuna கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி., “எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே எதிரணியில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் சிறிதரனுக்கு […]

இந்தியா செய்தி

திடீர் திருப்பம்: தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது தே.மு.தி.க.!

  • February 19, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விடயங்கள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் யாருடன் கூட்டணி என்ற விடயத்தில் மௌனம் காத்து வந்த தே.மு.தி.க. இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சங்கமித்துள்ளது. சென்னையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் […]

இலங்கை செய்தி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவரஞ்சினி நியமனம்!

  • February 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் […]

பொழுதுபோக்கு

வேள்பாரி நாயகனாக தனுஷ்?

  • February 19, 2026
  • 0 Comments

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் நடிகராக தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் இது தொடர்பில் நடிகர் தனுஷ் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது. அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் இயக்குநர் […]

விளையாட்டு

T20 World Cup: இன்றைய போட்டிகள் தொடர்பான விபரம்…!

  • February 19, 2026
  • 0 Comments

ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 37 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலிItaly மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு Eden Gardens நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் – 8 சுற்றுக்குள் சென்றுவிட்டதால் இன்றைய ஆட்டம் அடுத்த கட்டம் தொடர்பில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 38 ஆவது லீக் போட்டியில் இலங்கை […]

அரசியல் இலங்கை செய்தி

‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்’ பற்றி கதைத்தால் இணைவு சாத்தியமில்லை!

  • February 19, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு ஐ.தே.கவின் UNP பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். அடுத்த தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ ஐக்கிய மக்கள் சக்தி SJP இணைவுக்கு தாமதப்படுத்தினால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும். இணைவுக்குரிய பேச்சு நடக்கும்போது அடுத்த ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!

  • February 19, 2026
  • 0 Comments

“இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், ” நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் […]

உலகம் செய்தி

இன்னும் கலையாத ‘போர் மேகம்’

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இன்னும் தணியவில்லை. அது தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கின்றது. ஈரான் உடனடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்றும், தவறினால் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்று அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவிதத்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் ராணுவப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன […]

error: Content is protected !!