உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் மேலும் உக்கிரமடையும்: போலந்து பிரதமர் எச்சரிக்கை!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் போர்ச்சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் Donald Tusk எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது நட்பு நாடுகளிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இப்பகுதியில் வரும் நாட்களில் அமைதி திரும்புவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைப் போக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரப்போகும் மாற்றங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சாத்தியமான மோதல்கள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இலங்கை செய்தி

‘கொலையாளிக்கு துணைபோகாதீர்’ – மட்டக்களப்பில் போராட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (27) பாரிய கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது. இதன்போது, போராட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பொலிஸாரால் பஸ்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, பிரதான வாயில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. […]

உலகம் செய்தி

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நாவின் ஈரான் சுட்டிக்காட்டு!

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது. எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும் Abbas […]

உலகம் செய்தி

“மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் தங்கும் விடுதிகள் இலக்கு வைப்பு”!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விடுதிகள் ஈரானின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்களையும் கட்டிடங்களையும் அமெரிக்க படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கப் படைகளுக்குத் தங்குமிடம் வழங்கும் விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்கப் படைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்கப் போவதாக ஈரான் ராணுவம் வெளிப்படையாக […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம்: மேலும் ஒரு சந்தேக நபர் கைது!

  • March 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் பெண் கொலைகள் மற்றும் தாலி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (26.03.2026) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்துப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலாரத்தின தலைமையில் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி விசாரணையில் ஏற்கனவே ஐந்து பேர் கைது […]

உலகம் செய்தி

ஈரானில் 723 கல்வி நிலையங்கள்மீது தாக்குதல்: 250 மாணவர்கள் பலி!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இப்போரில் இதுவரையில் ஈரானில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் கல்வி அமைச்சு இந்த தகவலை இன்று (27) வெளியிட்டுள்ளது. மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, சுமார் 723 கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் இந்தத் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இராணுவ இலக்குகள் மட்டுமின்றி பொதுமக்கள் குடியிருப்பு, கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்கப்படுவது […]

இந்தியா செய்தி

இந்தியாவில் Lockdown? மத்திய அரசு கூறுவது என்ன?

  • March 27, 2026
  • 0 Comments

இந்தியாவில் பொதுமுடக்கம் Lockdown அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி Hardeep Singh Puri திட்டவட்டாக இன்று (27) தெரிவித்தார். மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை […]

உலகம் செய்தி

ட்ரம்பின் கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமர்சனத்திற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு கோரிக்கையையும் தமது நாடு நிராகரிக்கவில்லை என்று Albanese தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா தங்களிடம் முன்னரே ஆலோசனை நடத்தவில்லை என்பதையும் ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை ட்ரம்ப்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் Anthony Albanese […]

உலகம் செய்தி

ஈரான் விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விசேட கூட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (27) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என தெரியவருகின்றது. தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது. ஈரானின் தற்போதைய பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

G7 மாநாட்டில் ‘மத்திய கிழக்கு போர்’ குறித்து ஆராய்வு: இந்தியாவும் பங்கேற்பு!

  • March 27, 2026
  • 0 Comments

G7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். G7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் நேற்று ஆரம்பமானது. இன்றும் கூட்டம் நடைபெறுகின்றது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுவருகின்றது. G7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், பிரான்ஸ் விடுத்த அழைப்பின் […]

error: Content is protected !!