உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை திசை திருப்ப மத்திய கிழக்கு போரை பயன்படுத்தும் ரஷ்யா
உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப ரஷ்யா முயல்வதாகக் ஜேர்மன் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் G7 மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், ஈரானின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தேவையான இலக்குகளை அடையாளம் காண புடின் உதவி செய்துவருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜேர்மன் […]












