இலங்கை

இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!

  • December 24, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 11 பொதிகளில் […]

error: Content is protected !!