பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்மொழிந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உறுதிப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியே ஈரான் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. நிலையான அமைதித் திட்டத்துக்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும், அந்நாட்டால் தங்களுக்கு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது என்றும் ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். எனினும், போர் நிறுத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் […]













