பொழுதுபோக்கு

அமிதாப் பச்சனை சந்தித்த கமல்!

  • February 24, 2026
  • 0 Comments

‘கல்கி 2898AD’ 2 படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களான அமிதாப் பச்சனும், கமல்ஹாசனும் நேரில் சந்தித்துள்ளனர். தற்போது ‘கல்கி 2898AD’ 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். இது குறித்த படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

பொழுதுபோக்கு

வெளியானது KHxRK Glimpse! இணைந்த கமல் – ரஜினி!

  • February 21, 2026
  • 0 Comments

நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் Glimpse வெளியாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகின்றார். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் Glimpse இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. https://www.youtube.com/watch?v=TROFVicWrTE

error: Content is protected !!