ஆஸ்திரேலியா விளையாட்டு

ஆஸ்திரேலிய பொலிஸார் அழுத்தம்: ஈரான் வீராங்கனை குற்றச்சாட்டு!

  • March 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய காவல்துறை தங்களை அந்நாட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினர் என்று ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைத் தடுக்க முயன்றதாகவும் Fatemah Shaban சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் எழுவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஐவர் ஈரான் திரும்ப முடிவெடுத்தனர் எனவும், இருவர் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையிலேயே தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளில் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டை […]

உலகம் செய்தி

‘very late’- பிரிட்டனின் முடிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கிய போதிலும், அதனை ட்ரம்ப் வெளிப்படையாக வரவேற்கவில்லை. மாறாக இது தாமதித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என அவர் விமர்சித்துள்ளார். இது விடயத்தில் பிரிட்டனின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதாக டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே மிகச்சிறந்த உறவு இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் பிரிட்டன் இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் கருத்தாக உள்ளது. ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதி!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துவந்த பிரிட்டன், தற்போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன் ஆரம்பத்தில் அனுமதி வழங்காதது தொடர்பில் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். எனினும், பிராந்தியப் பாதுகாப்பையும் நட்பு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை செய்தி

கோட்டாபய தப்பியோட எவ்வளவு செலவானது? தகவல்களை வெளியிட உத்தரவு!

  • March 21, 2026
  • 0 Comments

மக்கள் புரட்சியின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றது தொடர்பான செலவீனங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, கடற்படை தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தத் தகவலை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று […]

செய்தி

இந்திய தூதுவருக்கு சீன மொழியில் புதிய பெயர்!

  • March 20, 2026
  • 0 Comments

இந்திய – சீன உறவு ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதாவது 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்திலேயே நெருங்க ஆரம்பித்துள்ளது. குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட மணிகொன்றோல் (moneycontrol) என்ற ஆங்கில செய்தித் தளம், இந்திய – சீன உறவின் நெருக்கம் குறித்து சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளது. இரு பெரிய எண்ணெய் கொள்வனவு நாடுகளான இந்தியாவும் சீனாவும், ஈரான் போரில் அமைதியை உருவாக்க சிறந்த தளம் என்று இச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எண்ணெய் வயல்களை ட்ரோன்கள் […]

இலங்கை செய்தி

அரச சேவை: அமைச்சரவைக்குழு கூடி ஆராய்வு!

  • March 20, 2026
  • 0 Comments

அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையை தொடர்ச்சியாக பேணுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு அரச […]

இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: நீதி அமைச்சர் திட்டவட்டம்!

  • March 20, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) சாணக்கியன் இராசமாணிக்கம் Chanakyan Rajamanickam எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். “ 2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது. காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை. போரின் போது இரு […]

உலகம் செய்தி

ஈரானின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி!

  • March 20, 2026
  • 0 Comments

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி Ali Mohammad Naini , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவராவார். ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி எத்தகைய போர்ச் சூழலிலும் தடையின்றித் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார். குறிப்பாக வளைகுடாப் பகுதிக்குள் அமெரிக்கக் கப்பல்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!

  • March 20, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu தெரிவித்தார். “தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக […]

இலங்கை செய்தி

அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை!

  • March 20, 2026
  • 0 Comments

இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று (20) எடுத்துரைத்தார். ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிரணியால் பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார். ஜனாதிபதி தமதுரையில் கூறிய முக்கிய சில விடயங்கள் வருமாறு, நடுநிலைக் கொள்கை “மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்தக் […]

error: Content is protected !!