இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி: பயண ஏற்பாடு குறித்து ஆராய்வு!

  • April 6, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் […]

இலங்கை செய்தி

“டிஜிட்டல் மயமாக்கல்” – ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

“டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாகும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி கூறியவை வருமாறு, “பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான […]

இலங்கை செய்தி

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

  • April 6, 2026
  • 0 Comments

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (06) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக […]

உலகம் செய்தி

ஈரான் உளவு பிரிவு தலைவரின் கதையை முடித்துவிட்டோம்: வேட்டை தொடரும் என்கிறது இஸ்ரேல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் Majid Khademi இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஈரானியத் தலைவர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதேவேளை, தமது உளவுப் பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானின் கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி உட்பட முக்கிய தளபதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது […]

உலகம் செய்தி

பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்மொழிந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உறுதிப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியே ஈரான் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. நிலையான அமைதித் திட்டத்துக்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும், அந்நாட்டால் தங்களுக்கு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது என்றும் ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். எனினும், போர் நிறுத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் […]

உலகம் செய்தி

வான்வழி தாக்குதலில் ஈரான் உளவுப்பிரிவு தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. Seyyed Majid Khademi என்ற அந்த உயர் அதிகாரி, IRGC இன் முக்கிய உளவுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கி வந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், சில ஈரான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.  

உலகம் செய்தி

ஈரான் பல்கலைக்கழகம்மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி. கண்டனம்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மீது Sharif University நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Yassamin Ansari வன்மையாகக் கண்டித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் மேற்படி கல்வி நிறுவனம் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பில் தனது சமூக ஊடகம் வாயிலாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலிலேயே பல்கலைக்கழகம் சேதமடைந்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதி சேதமடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. […]

செய்தி பொழுதுபோக்கு

இலங்கை பூர்வீகம்: சின்னத்திரை நடிகை தற்கொலை!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கயல்” சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் பிப்பின் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சுபாஷிணி தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

மே மாதம்வரை எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • April 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியா தனது எரிபொருள் இருப்பை எதிர்வரும் மே மாதம்வரை உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் Chris Bowen மேற்படி தகவலை இன்று (06) வெளியிட்டுள்ளார். மே மாதம் இறுதி வரை தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டபூர்வ ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவும் இக்கட்டான காலக்கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விநியோகத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிர கவனம் […]

இலங்கை செய்தி

QR முறை விரைவில் நீக்கம்: புதன் விடுமுறையும் மாறும்!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுவருகின்றது. குறிப்பாக பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு […]

error: Content is protected !!