அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

அரசியல் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலகுவாரா பிரதமர்? வெளியானது அறிவிப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  Dr. Harini Amarasuriya பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர Devananda Suraweera தெரிவித்தார். கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டுக்கு, […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அரசியல் புயலை கிளப்பிவிட்டுள்ள ஆங்கில பாடத்திட்டம்: பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்து!

  • January 1, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாடப்புத்தகத்துக்கான மாதிரியில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்கும் வகையில் இது விடயத்தில் சதி இடம்பெற்றுள்ளதா என கல்வி […]

error: Content is protected !!