அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியின் உரைக்கு இனவாத முத்திரை குத்தும் விமல்!

  • January 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இனவாதத்தை பரப்புகின்றார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். “ நாட்டில் இன்று இனவாதத்தை பரப்பும் பிரதான நபராக ஜனாதிபதியே இருக்கின்றார். வைராக்கியத்தை விதைக்கவே வடக்கிலுள்ள விகாரைக்கு பௌத்தர்கள் வருகின்றனர் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது வைராக்கியத்தை விதைக்க வருபவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதையே இதன்மூலம் மறைமுகமாக அவர் கூற முற்பட்டுள்ளார் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். எனவே, இனவாதத்தை பரப்புவது யார்? தமிழ் இனவாதியொருவர்கூட […]

அரசியல் இலங்கை செய்தி

வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!

  • January 13, 2026
  • 0 Comments

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமர சூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார். கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 […]

அரசியல் இலங்கை செய்தி

2 நாளாக தொடர்கிறது விமலின் போராட்டம்: அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!

  • January 13, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் Wimal Weerawansa முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அரசியல் புயலை கிளப்பிவிட்டுள்ள ஆங்கில பாடத்திட்டம்: பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்து!

  • January 1, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாடப்புத்தகத்துக்கான மாதிரியில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்கும் வகையில் இது விடயத்தில் சதி இடம்பெற்றுள்ளதா என கல்வி […]

error: Content is protected !!