செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை […]

இலங்கை செய்தி

“படையினரை அவமதித்த தரப்பே தற்போது அபிமானம் பற்றி கதைக்கிறது”

  • February 7, 2026
  • 0 Comments

“படையினரை மணல் மூட்டை அடுக்குவதற்கு அன்று பயன்படுத்தியவர்களே, இன்று படையினருக்குரிய அபிமானம் பற்றி கதைக்கின்றனர்.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். சுதந்திர தின அணிவகுப்பின்போது போரை முடிப்பதற்கு படையினர் வழங்கிய பங்களிப்பு பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியவை வருமாறு, “ முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அபிமானம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனை நாம் பாதுகாப்போம். […]

இலங்கை செய்தி

“ இலங்கை படையினருக்கு எதிரான தடை சர்வதேச சட்டத்திற்கு முரண்”

  • February 7, 2026
  • 0 Comments

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சுட்டிக்காட்டியுள்ளார். இங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake கேள்விகளை எழுப்பி இருந்தார். இக்கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று பதிலளித்தார். “ 2025 மார்ச் மாதம், பிரித்தானியாவினால் தடைகள் விதிக்கப்பட்ட போது, அமைச்சரவையில் ஆராயப்பட்டு, இது […]

அரசியல் இலங்கை செய்தி

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா?

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya நிராகரித்தார். சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி: டில்வின் சில்வா மறுப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – […]

அரசியல் இலங்கை செய்தி

புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்களுக்கு ‘ஐஸ்’ வைப்பு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா நாட்டுக்காக நடத்தப்பட்டதா அல்லது புலி ஆதரவு தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களை திருப்திப்படுத்த நடத்தப்படதா.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சரத் வீரசேகர Sarath Weerasekara கேள்வி எழுப்பியுள்ளார். “இலங்கை 17 தடவைகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. எனினும் எமது மூதாதையர்கள் நாட்டைப் பாதுகாத்தனர். 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 72 ஆம் ஆண்டிலேயே அது முழு […]

அரசியல் இலங்கை செய்தி

“மோசடிகளை திசை திருப்பவே ராஜபக்ச குடும்பம் இலக்கு வைப்பு”

  • January 31, 2026
  • 0 Comments

“ எனது குடும்பத்தை இலக்கு வைத்து தனது ஆட்சியில் அரங்கேறும் மோசடிகளை திசை திருப்பலாம் என NPP அரசாங்கம் கருதுமானால் அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (31) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுச்சி பெற்றது. அடுத்த தேர்தல்களிலும் நிச்சயம் […]

அரசியல் இலங்கை செய்தி

Systems change நாசமாகிவிட்டது: சாடுகிறார் நாமல்!

  • January 30, 2026
  • 0 Comments

“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம். இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன். மக்களுக்கு வழங்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

முக்கிய துறைகளில் அரசியல் தலையீடு: நாமல் குற்றச்சாட்டு!

  • January 29, 2026
  • 0 Comments

பொலிஸாருக்கு அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், நீதித்துறையிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது தேவைக்கேற்ப பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன செயல்பட வேண்டும் என அரசாங்கம் நினைத்துக்கொண்டிருப்பது தவறு எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். “ யதார்த்தம் என்னவென்பத புரிந்து அரசாங்கம் செயல்பட வேண்டும். தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காக […]

இலங்கை செய்தி

அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்சவுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரை!

  • January 27, 2026
  • 0 Comments

“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு Shiranthi Rajapaksa உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்றது. இதன்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் FCID பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை […]

error: Content is protected !!