அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு முழு ஆதரவு: சஜித் விசேட அறிவிப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

கல்வி சீர்திருத்தங்களை education reforms முறையாக முன்னெடுப்பதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இன்று (26) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ தரம் 6 இற்குரிய பாட அலகுச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்துவதற்கு ஆளுங்கட்சி முயற்கின்றது. அந்த […]

இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை: தீர்வுக்கு நிபுணர்கள் அடங்கிய பொறிமுறை!

  • January 21, 2026
  • 0 Comments

” கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் .” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம், கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (FUTA) […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பு அவசியம்: மேர்வின் சில்வா வலியுறுத்து!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையின் கலாசாரத்துக்கே உரித்தான வகையில் கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றம் வந்திருந்த மேர்வின் சில்வாவிடம், நீதிமன்ற வளாகத்தில் வைத்து கல்வி மறுசீரமைப்பு பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாக மாறியுள்ள “கல்வி”!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வியைக்கூட அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கு எதிரணி வந்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அத்துடன், கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

அரசியல் இலங்கை செய்தி

கல்வி ஆபாசமாக்கப்டுவதையே நாம் எதிர்க்கின்றோம் – சஜித்

  • January 17, 2026
  • 0 Comments

“கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகளை நாம் எதிர்க்கவில்லை. மாறாக கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது. கல்வி மறுசீரமைப்பை நாம் வலியுறுத்தியபோது தேசிய மக்கள் சக்தி எம்மை விமர்சித்தது. ஆங்கிலம், சீனம், ஜப்பான் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை ஓயமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார Rohana Bandara தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய ரோஹன பண்டார எம்.பி., “ நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்

  • January 16, 2026
  • 0 Comments

” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும். எனவே, எமது முதலாவது […]

அரசியல் இலங்கை செய்தி

வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!

  • January 13, 2026
  • 0 Comments

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமர சூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார். கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்பின் அவசியத்துவம் ஏற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக அவர்கள் கூறியுள்ளனர். தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய […]

இலங்கை செய்தி

“தரம் 6” கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

  • January 13, 2026
  • 0 Comments

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உரிய மீளாய்வுகளின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார். “ தரம் […]

error: Content is protected !!