பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியாவை தாக்கும் புயல்!
Pedro எனப் பெயரிடப்பட்ட புயல் இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த வாரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு அயர்லாந்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி புயலானது பிரான்ஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





