இலங்கை

மாமனாரை கொலை செய்த மருமகன் : பொலிஸார் தீவிர விசாரணை

குடும்ப வன்முறை காரணமாக மருமகன், மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது.

மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்