இலங்கை செய்தி

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய எழுவர் கொண்ட நிபுணர் குழு நியமனம்

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

01.பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

02.கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

03.கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

04.கலாநிதி ஆர்.எம்.டி.எஸ். குணரத்ன (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயன மற்றும் செயன்முறைப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

05.கலாநிதி உதித் விஜயவர்தன (உறுப்பினர்) – மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

06.கலாநிதி கீதால் சிறிவர்தன (உறுப்பினர்) – இயந்திரப் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

07.கே.எல்.ஆர்.சி. விஜயசிங்க (ஒருங்கிணைப்பாளர்) – மேலதிக செயலாளர் (மின்சக்தி மற்றும் மின்சக்தித் துறை மறுசீரமைப்புப் பிரிவு), வலுசக்தி அமைச்சு

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!