ஐரோப்பா

வளர்ப்பு நாய்களால் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ருமேனிய பெண்ணின் உடல்

ருமேனியா நாட்டின் புக்கரெஸ்ட் பகுதியில் வசித்தவர் அட்ரியானா நீகோ(34). இவர், தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்களை வளர்த்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவரை, கடந்த சில நாள்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்தப் பலனும் இல்லாததால், குடும்பத்தினர் அவர் வசித்த வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ருமேனிய காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

மேலும், அட்ரியானாவின் பாதி உடலை அவரது 2 வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நாய்களுக்கு உணவு அளிக்கப்படாததால், அட்ரியானாவின் சடலத்தை அந்த நாய்கள் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் அங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூராய்வின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இதேபோல் கடந்த 2023ஆம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டில் வயது மூப்பினால் உயிரிழந்த 67 வயது மூதாட்டியின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டது பல வாரங்கள் கழித்தே காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்