பொழுதுபோக்கு

தி “கேரளா ஸ்டோரி” கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசனை அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் வெளுத்துவாங்கி உள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கடந்த மே 5-ந் தேதி வெளியான இப்படத்திற்கு ரிலீசுக்கு முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு காரணம் இப்படத்தில் கேரளாவை சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமிய நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று இருந்தன.

இது உண்மை சம்பவம் என்று குறிப்பிட்டிருந்ததால் தான் இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ரிலீசுக்கு முன்பே இப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் இப்படம் நாடெங்கும் மே 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன பின்னர் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

See also  தளபதி 69-ல் இணைந்த 40 வயது நடிகை... யாரும்மா நீ...

இப்படி பல்வேறு எதிர்ப்புகளை கடந்து ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது.

சமீபத்தில் இப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசன், தான் பிரச்சார படங்களுக்கு எதிரானவன் என்றும், தி கேரளா ஸ்டோரி படத்தின் போஸ்டரில் இது உண்மை சம்பவம் என போட்டால் மட்டும் போதாது, நிஜமாகவே அது உண்மை சம்பவமாக இருக்க வேண்டும். அப்படத்தில் இடம்பெற்றுள்ளது உண்மை சம்பவமே இல்லை என்று பரபரப்பு கருத்து தெரிவித்து இருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்தை பார்த்து கடுப்பான இயக்குனர் சுதிப்தோ சென், இது போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. முதலில் பதிலளித்து வந்த நான் பின்னர் அதை நிறுத்தியதற்கு காரணம், தி கேரளா ஸ்டோரி படத்தை பிரச்சார படம் என்று சொன்னவர்கள் கூட படம் பார்த்த பின்னர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். படம் பார்க்காமலேயே அதனை பிரச்சார படம் என்று விமர்சிக்கிறார்கள்.

பாஜகவினருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது என்பதற்காக இது அவர்களுடைய படம் என்று அர்த்தமல்ல. உலகளவில் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது. படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை” என கமல்ஹாசனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சுதிப்தோ சென்.

See also  இலங்கையில் ராஜாவாக இருந்த சிவாஜியை கமல் ஓவர்டேக் செய்த கதை தெரியுமா?

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content