பொழுதுபோக்கு

ராஜஸ்தான், மும்பை அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்று (07) நடைபெறும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals மற்றும் மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ACA மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

நேற்றைய ஆட்டம் ரத்து

அதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Kolkata Knight Riders மற்றும் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி விடாது பெய்த கனமழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடினர்.

5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!