உலகம்

எதிர்க்கட்சி தலைவரின் மரணத்துக்கு புடின் பொறுப்பு கூற வேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் Alexei Navalny மரணத்துக்கு புடின் Putin நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் enny Wong வலியுறுத்தியுள்ளார்.

அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.

மேற்படி நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் எக்ஸ் தள பதிவில்,

“அலெக்ஸி நவால்னியின் துயர மரணம் நடந்து ஈராண்டுகள் கடந்துள்ளன. புடினின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அவரது துணிச்சலையும் எதிர்ப்பையும் நாங்கள் மதிக்கிறோம்.

புடினும், ரஷ்ய அதிகாரிகளும் அவரின் மரணத்திற்கு
பொறுப்பு கூற வேண்டும்.

மேலும் ரஷ்யாவில் மனித உரிமைகளை நிலைநிறுத்த தைரியமாக பாடுபடுபவர்களுக்கு ஆஸ்திரேலியா துணைநிற்கும்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!