“புருஷன்” – படபிடிப்பு ஆரம்பம்!
விசால் மற்றும் தமன்னா நடிக்கும் புருஷன் படத்துக்குரிய படபிடிப்பு தொடங்கியுள்ளது.
நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படங்களை வழங்குவது இயக்குநர் சுந்தர் சி க்கு கைவந்த கலை.
அவரின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘புருஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது.
டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடித்து இருந்தனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன.
‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.





