வரி ஏய்ப்பு செய்யும் மதுபான நிறுவனங்களுக்கு தண்டனை
எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களின் மது உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு மதுவிலக்கு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து 17,300 கோடி ரூபாவை வரி வசூலிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், பத்து கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வரி செலுத்துவோரின் பட்டியலை வழங்காதது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் குழு கேள்வி எழுப்பியது.
(Visited 3 times, 1 visits today)