பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.
வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் பிரதீப்பின் மார்க்கெட்டும் இப்போது எகிறி உள்ளது.
ஆனால் அவரை ஓரம் கட்டும் அளவுக்கு இப்போது ஒரு ஹீரோ தயாராகி இருக்கிறார்.
நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்ட மணிகண்டன் ஜெய் பீம் ராஜாகண்ணுவாக நம்மை வியக்க வைத்தார்.
இதற்கு முன்பாக அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை ஓவர் நைட்டில் பிரபலமாக்கியது.
அதைத்தொடர்ந்து இன்று அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் நைட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதன் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர்.
அந்த வகையில் இப்படம் லவ் டுடேவை மிஞ்சும் அளவுக்கு மிகவும் எதார்த்தமாகவும், கலகலப்பாகவும் இருக்கிறதாம்.
அதிலும் மணிகண்டனின் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர்.