காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அமைதி திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் ஒரு இடைக்கால தொழில்நுட்ப பாலஸ்தீன அரசாங்கத்தை நிறுவுவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இது ஒரு சர்வதேச “அமைதி வாரியத்தால்” மேற்பார்வையிடப்பட்டு, ஒரு சர்வதேச பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.





