வாழ்வியல்

மாடித் தோட்டம் செழிக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ் – ஆரஞ்சு தோல் மேஜிக்!

தற்போது மக்களிடையே வீட்டுத் தோட்டம் மற்றும் மடித்தோட்டம் செய்வது ஒரு பொழுது போக்காக மாறிவருகிறது.

வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது செடிகளைத் தாக்கும் பூச்சிகள்தான்.

தோட்டம் உள்ளவர்கள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் அன்றாடம் சாப்பிட்டுத் தூக்கி எறியும் ஆரஞ்சு பழத்தோல்கள் ஒரு சிறந்த இயற்கை அரணாகச் செயல்படுகின்றன.

அதாவது ஆரஞ்சுத் தோல்களில் லிமோனீன் (Limonene) என்ற இயற்கையான எண்ணெய் உள்ளது. இதன் வாசனை மற்றும் வேதிப்பண்பு பல வகையான பூச்சிகளுக்கு எமனாக அமைகிறது.

நாம் செடிகளைச் சுற்றி ஆரஞ்சுத் தோல்களைச் சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டால், அதன் காரமான வாசனைக்கு எறும்புகள் மற்றும் (Aphids) அசுவினிப் பூச்சிகள் வராது.

அது மட்டும் அல்லாது மாலை நேரங்களில் செடிகளுக்கு அருகே ஆரஞ்சுத் தோல்களை வைப்பதன் மூலம் தேவையற்ற பூச்சிகள் அண்டாமல் தடுக்கலாம்.

இயற்கை உரமாக (Organic Fertilizer)ஆரஞ்சுத் தோல்கள் மண்ணின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK) ஆகிய சத்துக்கள் மண்ணிற்கு இயற்கை ஊக்கமருந்தாகச் செயல்படுகின்றன.

மேலும் பொட்டாசியம் சத்து தாவரங்களின் வேர்களை வலிமையாக்கி, செடி சீக்கிரம் வாடாமல் இருக்க உதவுகிறது.

நீல நிற பூக்கள் அல்லது சில குறிப்பிட்ட வகை செடிகளுக்கு (உதாரணமாக ரோஜா) அமிலத்தன்மை கொண்ட மண் தேவைப்படும். ஆரஞ்சுத் தோல் மண்ணின் pH அளவைச் சீராக்க உதவுகிறது.


இதை நாம் பயன் படுத்தும் நேரடி முறை: தோல்களைச் சிறு துண்டுகளாக்கி செடியின் வேர்ப்பகுதியிலிருந்து சற்றுத் தள்ளி மண்ணில் புதைக்கலாம்.

அல்லது தோல்களை நீரில் 24 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரைச் செடிகளின் மீது தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டலாம்.

உங்கள் வீட்டு உரக்குவியலில் ஆரஞ்சுத் தோல்களைச் சேர்ப்பது உரத்தின் தரத்தை அதிகரிக்கும். ஆனால், அதிகப்படியான தோல்கள் சிதைவதற்கு அதிக காலம் எடுக்கும் என்பதால் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்ப்பது நல்லது.

AJ

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!