பொதுமன்னிப்பு கோரி 1500இற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பம்!
வெனிசுலா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சட்டமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை மன்னித்து விடுவிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு வெனிசுலா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய 379 கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





