அமைச்சர் பிரசன்னா என்னை மிகவும் தொந்தரவு செய்கிறார்!! பெண் ஒருவர் முறைப்பாடு

தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சீவி டி சில்வா, தனக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடுகின்றார்.
அமைச்சரிடம் இருந்து தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும், கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அவர் தனது தனிப்பட்ட காரில் தனக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக கடுவெல நீதிமன்றத்திற்கு வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)