இந்தியா தமிழ்நாடு

தே.மு.தி.கவிலிருந்து விலகிய மீசை ராஜந்திரன் அ.தி.மு.கவில் சங்கமம்!

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களமும் அனல் கக்குகின்றது.

கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும் கட்சி தாவும் படலம் இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில் தே.மு.தி.கவின் செய்தித் தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.கவில் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் மீசை ராஜேந்திரன்.

இவருக்குத் திரையுலகில் களம் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அதன் காரணமாக, கடந்த 31 ஆண்டுகளாக விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அவரது மன்றத்திலும், கட்சி தொடங்கப்பட்ட பின் கடந்த 21 ஆண்டுகளாக தேமுதிகவிலும் பயணித்து வந்தார்.

மேலும் அவருக்கு செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்று வந்த ராஜேந்திரன், முன்னதாக நடந்த தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பு பெற்றார்.

இருப்பினும், விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார்.

நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் சீட் எதிர்பார்த்த நிலையில், தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த ராஜேந்திரன் தே.மு.தி.க இருந்து விலகி, நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!