சாய் பல்லவியை குறி வைத்தார் மணிரத்னம்!
மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படமொன்றில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம், “நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடைய இயல்பான நடிப்பு பிடிக்கும்” என்று கூறி இருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார்.
ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் ஹராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர்,
ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





