பொழுதுபோக்கு

தளபதி 68 படத்தில் இணைந்த நடிகை இவானா… அட இவங்களுமா?

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சென்னையிலேயே படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டன. தொடர்ந்து தாய்லாந்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில் தந்தை மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இளம் விஜய்க்காக லாஸ் ஏஞ்சல்சில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.

மேலும், தளபதி 68 படத்துடன் மாநாடு படம் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தளபதி 68 படத்தில் மாஸ் நடிகர்களின் கூட்டணி இணைந்துள்ளது. பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஸ்நேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

மேலும் 80, 90களின் பேவரிட் நாயகன் மோகன் படத்தில் வில்லனாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் லவ் டுடே படத்தின் நாயகி இவானா இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தில் இவர்கள் இருவரின் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content