சிலியில் நெடுஞ்சாலையில் வெடித்து சிதறிய லொறி!
சிலி (Chile’s) தலைநகர் சாண்டியாகோவில் (Santiago) உள்ள நெடுஞ்சாலையில் எரிவாயு லொறியொன்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மேற்படி சம்பவத்தால் நெடுஞ்சாலையில் பயணித்த சுமார் 50 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





