வயர்லெஸ் விழாவில் ‘யே’ பங்கேற்பு சர்ச்சை – பிரதமர் கவலை, பெப்சி ஆதரவு வாபஸ்
இந்த கோடையில் லண்டனில் நடைபெறவுள்ள Wireless Festival நிகழ்ச்சியில் Kanye West
முக்கியக் கலைஞராக பங்கேற்பது குறித்து பிரதமர் Starmer கவலை வெளியிட்டுள்ளார்.
யூத விரோதக் கருத்துக்கள் தொடர்பாக விமர்சனங்களுக்கு உள்ளான யே, கடந்த ஜனவரியில் மன்னிப்பு கோரியிருந்தாலும்,
அவரை முக்கிய கலைஞராக அறிவித்திருப்பது “மிகுந்த கவலையளிக்கிறது” என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளாரட்.
இதன் பின்னணியில், விழாவின் முக்கிய ஆதரவாளரான Pepsi தனது ஆதரவை மூன்று நாள் நிகழ்ச்சிக்காக வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
“யூத விரோதம் எந்த வடிவிலும் ஏற்க முடியாதது; அது எங்கு இருந்தாலும் உறுதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
வடக்கு லண்டனில் நடைபெறும் இந்த ராப் மற்றும் ஆர்&பி இசை விழாவில், 48 வயதான அமெரிக்க கலைஞர் Kanye West மூன்று நாட்களிலும் முக்கிய கலைஞராக அறிவிக்கப்பட்டிருந்தார்.





