காவாலா மோகம்… யூடியூபருடன் குத்தாட்டம் போட்ட இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் உலகளவில் பிரபலமாகி இருக்கிறது.
வெளியானதில் இருந்து பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஏராளமான ரீல்ஸ் மற்றும் பதிவுகளில் மோகம் குறையாமல் உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் வைரல் மோகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
அதன்படி ஹரிஷி சுசுகி ஜப்பானை சேர்ந்த யூடியூபர் மேயோ சான்-உடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை தனது டுவிட்டர் கணக்கில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆக துவங்கியது.
மேலும் பலர் வீடியோவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.
Kaavaalaa dance video with Japanese YouTuber Mayo san(@MayoLoveIndia)🇮🇳🤝🇯🇵
My Love for Rajinikanth continues … @Rajinikanth #Jailer #rajinifansVideo courtesy : Japanese Youtuber Mayo san and her team pic.twitter.com/qNTUWrq9Ig
— ONO Keiichi, Ambassador-designate of Japan (@JapanAmbIndia) August 16, 2023