உலகம்

ஈரான் நீர்வழியை ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது – கொந்தளிக்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்!

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் இருந்தபோதிலும், ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றும், அதன் அணுகல் “கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அபுதாபியின் அரசு எண்ணெய் நிறுவனமான அட்னாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அல் ஜாபர் ( Sultan Al Jaber)  தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாத கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்ற கொள்கையைச் சீர்குலைக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த முக்கிய நீர்வழியை எந்த வடிவத்திலும் ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் ஏற்றப்பட்ட சுமார் 230 கப்பல்கள் தற்போது போக்குவரத்திற்காகக் காத்திருக்கின்றன. இது விநியோகத் தாமதங்கள், இறுக்கமான சந்தைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது.

ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது குறித்த நிச்சயமற்ற தன்மை, எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!